Monday, July 16, 2012

தி எட்ஜ் ஆப் ஹெவன் (2007)

படத்தின் கதை இரண்டு பகுதியாக பிரிக்கப்படுகிறது..
1. எட்டரின் மரணம் (Yeter's Death), 2. லோட்டேவின் மரணம் (Lotte's Death).

1. எட்டரின் மரணம் (Yeter's Death) :
முதல் பகுதியில் எட்டராக வரும் பெண் ஜெர்மனியில் விபச்சார தொழில் செய்து இஸ்தான்புல்லில் இருக்கும் தன் மகளுக்கு பணம் அனுப்புகிறாள். 70 வயதான அலி (Ali ) அடிக்கடி எட்டரிடம் வந்து போக, ஒரு நாள் அலி அவளை தன்னுடன் வந்து வாழுமாரும், தற்போதய ஊதியத்தை விட இரண்டுமடங்காக தந்து பார்த்துக்கொள்ளுமாறும் கூறி அழைக்க, ஒத்துக்கொண்டு எட்டரும் செல்கிறாள். அலிக்கு 28 வயதில் நெஜத் (Nejat) என்று ஒரு மகன். அப்பா திடீரென ஒரு பெண்ணை கூட்டிவந்தது அதிர்ச்சியாக இருந்தாலும் ஏற்றுகொள்கிறான். இருவருக்கும் ஒரு நல்லுறவு வளர்கிறது. எட்டர் நெஜத்திடம் தன் மகளை பற்றியும், அவளை பிரிந்து வருந்துவதாகவும், அவளை நல்ல மேற்படிப்பு படிக்க வைக்க விரும்புவதாகவும் கூறுகிறாள். அலியோ ஒரு குடிகாரன். குடிபோதையில் மகனையும், எட்டேரையும் ஒருநாள் தவறாக பேச மகன் கோபத்துடன் கிளம்புகிறான். எட்டரையும் அலி கோபத்தில் அடிக்க, தலையில் அடிபட்டு எட்டர் இறக்கிறாள். அலி கொலைகுற்றதிற்காக சிறைபடுத்தப் படுகிறார். தந்தையை வெறுத்த நெஜத், எட்டரின் ஆசைப்படி அவள் மகளை மேற்படிப்பு படிக்கவைக்க மகளை தேடி இஸ்தான்புல் செல்கிறான். ஆனால் அவர்கள் குடும்பத்தில யாருக்கும் எட்டரின் மகள் இருக்குமிடம் தெரியவில்லை. இதனால் அங்கு அதிர்ஷ்டவசமாக விற்பதற்கு இருக்கும் ஒரு நூலகத்தை வாங்கி நடத்திக்கொண்டு, எப்படியும் ஒருநாள் அவளை கண்டுபிடிக்க வேண்டுமென்று அங்கேயே வாழ்கிறான்.2. லோட்டேவின் மரணம் (Lotte's Death) :
துருக்கி நாட்டில் ஒரு கலவரத்தின் நடுவே ஒரு காவலாளியின் துப்பாக்கியை பிடிங்கிக்கொண்டு ஒரு பெண் ஓட, அவளை காவலர்கள் துரத்துகிறார்கள். அவர் பெயர் அய்தென் (ayten). அவள் ஓடி, ஒரு கட்டிடத்தின் மொட்டைமாடியில் மறைந்துகொண்டு,  அங்கு அந்த துப்பாக்கியை ஒளித்து வைத்துவிட்டு, அங்கிருந்து கிளம்புகிறாள். அவள் இருந்த ஒரு புரட்சிப்படையில் சில பணப்பிரச்சனையால் அதிலிருந்து வெளியேறும் அய்தென், ஜெர்மனிக்கு செல்கிறாள். ஒரு பல்கலக்கழகத்தில் தற்செயலாக அய்தெனுக்கு உதவும் லோட்டே (Lotte), அவள் வீட்டிலும் தங்கவைக்கிறாள். லோட்டேவின் தாய்க்கு இதில் சிறிதும் விருப்பம் இல்லை. நாளடைவில் லோட்டேவுக்கும், அய்தெனுக்கும் உடலுறவு கொள்ளும் அளவிருக்கு உண்டாகும் நெருக்கத்தை சகித்துகொல்லாத லோட்டேவின் தாய், ஒரு நாள்  அய்தெனை வீட்டை விட்டு வெளியேற்றுகிறாள். தாய்மீது கோபம்கொண்டு லோட்டேவும் அவளுடனே செல்கிறாள். செல்லும் வழியில், காவலாளிகள் பின்தொடர்ந்து நிறுத்த, அய்தென் ஒரு போராளி என்பதால் வேறு வழி இல்லாமல் தப்பி ஒடப்பார்கிறாள். ஆனால் பிடிபட்டு இஸ்தான்புல் பெண்கள் சிறையில் அடைக்கபடுகிறாள். தாயிடம் ஒருமனதாக ஒப்புதல் வாங்கிகொண்டு அய்தெனை வெளியெடுக்க இஸ்தான்புல் வருகிறாள் லோட்டே. பார்வையாளர்கள் நேரத்தில் அய்தெனை சந்திக்க, அய்தென் லோட்டேவிடம் அவள் பதுக்கிவைத்த துப்பாக்கியை எடுத்துவருமாறு உதவி கேட்டு, அந்த இடத்திற்கான முகவரி, அடையாளங்களையும் ஒரு பேப்பரில் எழுதி தருகிறாள். அதைவைத்து தேடிப்போன லோட்டே, துப்பாக்கியையும் எடுத்துகொண்டு வீதியில் நடந்து வர, அங்கிருக்கும் சிறுவர்கள் அவளின் கைப்பையை களவாடி செல்கின்றனர். துரத்திக்கொண்டு ஓடிய லோட்டே அந்த சிறுவர்களை ஒரு யாருமில்லாத சந்துக்குள் பார்க்கிறாள். அவர்கள் கையில் அந்த துப்பாக்கி. அதை திருப்பிகொடுக்குமாறு கேட்க, ஒரு சிறுவன் அவனை அறியாமல் துப்பாக்கியை சுட, லோட்டே அங்கேயே இறந்து போகிறாள். இதைபடிக்கும்போது இரண்டு கதைக்கும் தொடர்ப்பு இருப்பதைப்போல்
தெரிகிறதா? இருக்காது. ஆனால் இரண்டு கதைக்கும் ஏகப்பட்ட தொடர்புகள் உண்டு. கதாபதிரங்களாகவும், காட்சிவடிவமைப்பாகவும் அத்தனை தொடர்புகள். திரைக்கதை அவ்வளவு அழகு. முதல் காட்சியும், நடுவில் வரும் சில காட்சிகளும் எதற்கு வந்தது என்றே தெரியாமல் கடந்து போகும், ஆனால் படம் போக போக அந்த காட்சிகளின் அர்த்தங்கள் தெரிய வர இன்னும் சுவாரசியமாக இருக்கும் திரைக்கதை.

லோட்டேவின் மரணத்திற்கு பிறகுதான் இரண்டு கதைக்கும் பிணைப்பே உண்டாகும். ஆனால் அது என்னவென்று ஆவலுடன் டவுன்லோட் செய்தோ, அல்லது டிவிடியோ வாங்கி பார்த்து அந்த அனுபவத்தை நீங்களே உணருங்கள்.  :)

2007ல் வெளியான இந்த அருமையான துருக்கி-ஜேர்மன்-இத்தாலியன் படத்தை எழுதி இயக்கியவர் பாதிஹ் அகின்(Fatih Akin). (ஆம்.. கலகலப்புனு ஒரு தமிழ் படக்கதைய  "சோல் கிட்சன்" ( Soul Kitchen)னு ஒரு ஜேர்மன் படத்துலேர்ந்து சுட்டாங்களே. அந்த "சோல் கிட்சன" எடுத்ததும் இவரேதான்.)  கேன்ஸ், பாங்காக், ஜேர்மன், ஐரோப்பா உள்ளிட்ட பல திரைப்பட விழாவில் பங்கெடுத்து 30க்கும் மேற்பட்ட விருதுகளை "தி எட்ஜ் ஆப் ஹெவன் ( The Edge of Heaven )" வென்றுள்ளது.

No comments:

Post a Comment